Thursday, March 21, 2013

தேரிக்காட்டில் ஒரு எழுத்துக்காடு

அது சுற்றிலும் தொழிலாளர் மிகுந்த பகுதி. அங்கு அதில் பனை ஓலையால் வேயப்பட்ட சிறு கோழி இறைச்சிக்கடை. அதன் பின்னால் சிறு விறகு கடை.காலை நேரம் அந்தக் கைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கோழிகளை துண்டு துண்டுகளாக்குகிறது.  மின் நிறுவையில் போடுகிறது.  பணத்தை பெற்று கல்லாவில் போடுகிறது. அந்த கைகள் உழைத்து உழைத்து இறுகிப்போனதாய் தெரிகிறது.  அந்தக் கைகளுக்கு சொந்தக்காரர் ஆறுமுகப்பெருமாள். வாடிக்கையாளர்களிடம் இன்முகமாய் பேசுகிறார்.  நாட்டு நடப்புகளை அலசுகிறார்.

முற்பகல் வியாபாரம் முடிகிறது.  இரத்தம் தோய்ந்த கைகள்  அலசப்படுகின்றன.

பிற்பகல் அதே கைகளில் இப்பொழுது பேப்பரும் பேனாவும் சிந்தனைகள் எழுத்துக்களாய் மாறி சிறுகதைகளாய் பிறக்கின்றன.  மாலை நேரம் அவரைத்தேடி இலக்கிய விரும்பிகள் வருகிறார்கள். இப்பொழுது அந்தக் கைகளுக்கு சொந்தக்காரர் கண்ணகுமார விஸ்வரூபன். தமிழ் சிறுகதை எழுத்தாளர்.

இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் படித்திருப்பதோ எட்டாம் வகுப்பு வரை மட்டுமே.  தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் என்னும் ஊர் ஆட்கொண்டு விட்ட மணிநகர் என்ற பகுதியைச் சார்ந்தவர். அந்தப் பகுதி செம்மண் போர்த்தப்பட்ட பனைமரங்கள் உயர்ந்து நிற்கும் தேரிக்காடு 1952ல் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ஆறுமுகப்பெருமாள் அவர்களால் குடும்பநிலை காரணத்தால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆனால் சிறுவயதில் அதிகநேரம் வாசமிருந்தது நூலகத்தில்தான். பல்வேறு தொழில்களை செய்த கடும் உழைப்பாளியான இவர் முதல் சிறுகதை 1982ம் ஆண்டு வாரமலரில் நாலணாச்சுமை என்ற பெயரில் வெளிவந்தது. அதன்பின் குமுதம் ஆனந்த விகடன் போன்ற முண்னணி இதழ்களில் தொடர்ந்து எழுதியுள்ளார்.

இவரது கதைகள் தென் தமிழக பகுதில் சாதாரண மக்களின் வட்டார மொழி வாசனையோடு சமுதாய் பிரச்சினைகளை அலசுகின்றன. வீண் வர்ணனையும் வார்த்தை ஜாலங்களும் இன்றி எளிய நடையிலேயே உள்ளன சமுதாய அவலங்களின் மீதான கேலியும் கோபமும் ஆற்றாமையும் வெள்ளமென வெளிப்படுத்துகின்றன. இதுவரை வெளிவந்த தொகுப்புகள் மூன்று. மணிமேகலை வெளியிட்டது இரண்டு. 'பாதை மாறாத பாதங்கள்' 'ஓடும் ரயிலின் ஓர் உத்தம தாய்' ஆகியன. பாவை பதிப்பகம்  வெளியிட்டது
 "சாலையோர ஆலமரம்" என்னும் தொகுப்பு . விரைவில் மற்றொன்று வெளிவர இருக்கின்றது..  சமீபத்தில் தினமலர் வாரமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் இவரது வெளிச்சத்துக்கு வராதவள் என்ற சிறுகதை இரண்டாம் பரிசை வென்றது.

சிறுகதை என்பது என்வென்பதை அவரது வார்த்தையிலேயே கேட்போம்.

“காணுகின்ற கேள்விப்படுகின்ற ஒரு சம்பவம் ஏற்படுத்தக் கூடிய உணர்ச்சி வசப்படுதலின் கலையம்ச வெளிப்பாடே சிறுகதை ஆகும்.

          பிடித்த எழுத்தாளர்களாக அகிலன்ää இராஜநாராயணன் ஆகியோரைக் கூறும் இவரை மிகவும் பாதித்த நாவலாக மேற்கு வங்க எழுத்தாளர் விபூதிபூசன் பானர்ஜி எழுதிய ஆரண்யக் (தமிழில் வனவாசி) என்னும் நாவலைக்கூறுகிறார்.  தமிழ் நாவல்களில் பிடித்த நாவல்களாக  சமுதாயத்தில் நிகழ்கின்ற அவலங்களை முகத்தில் அறைந்தாற்போல் கூறும் நெஞ்சில் ஒரு அலைகள் எங்கே போகிறோம் ஆகியவற்றை கூறுகிறார்.

           இவரது எழுத்துக்கள் செம்மணல் வெளியான தேரிக்காட்டை சூழ்ந்துள்ள கிராமங்களில் வாழ்கின்ற ஏழை மக்களின் வாழ்நிலைகளை பெரும்பாலும் படம்பிடிப்பதால் இவருக்கு "தேரி இலக்கியவாதி" என்று சமீபத்தில் ஆர் நல்லக்கண்ணு அவர்களால் பட்டம் சூட்டப்பட்டதை பெருமையாகக் கொள்கிறார்.  தற்சமயம் 1970களுக்கு முன்பு தேரியில் விறகு சுமந்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு நாவல் எழுதி வரகிறார்.  அது வெளிவர காத்திருப்போம்.    

எழுதுவது என்பதே அரிதான விஷயம். அதிலும் சாதாரண நிலையில் இருந்துகொண்டு தொடர்ந்து எழுதி வரும்  கண்ணகுமார விஸ்வரூபன் அவர்களை பாராட்டுவோம் .

Tuesday, March 12, 2013

செம்பவம் சிறுகதை

எனக்கு ஏனோ பறவைகளை மிகவும் பிடிக்கும். அதற்காக பறவை ஆராய்ச்சியாளரோ, பறவைகளை காணும் சங்கத்தின் உறுப்பினரோ இல்லை. ஊருக்கு ஒதுக்குபுறமாக

தேரிப்பகுதியிலோ காட்டுப் பகுதியிலோ காற்றுடன், அமைதி  தேடிச் செல்லும் பொழுது அங்கே சுதந்திரமாக சந்தோசமாக திரியும் பறவைகளை கண்டுவிட்டால் என்னையரியாமல் ‘நீங்கள் எல்லாம் இங்கேயா இருக்கீங்க? சொல்லவே இல்ல’ என்று வாய்விட்டு சொன்னதுண்டு.
 ஙஇருசக்கர வாகனத்தில் பயணிக்கும்பொழுது காட்டுப்பகுதியில் சாலையின் நடுவே சிலசயம் யாரோ சிதறவிட்ட தானியங்களை பொறுக்கியபடி பறவைக் கூட்டம் நிற்பதுண்டு. அவ்வாறு காண நேர்ந்தால் அவைகளை கலைக்காமல் தூரத்திலேயே வண்டியை இரண்டு,மூன்று நிமிடங்கள் நிறுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. அவை எவ்வித கவலைகளுமின்றி உண்டு மகிழ்வதை கண்டு ரசிப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் ‘சிட்டுக்குருவிகளைப் பாருங்கள் அவை விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை’ என்ற பைபிள் வசனம் மனதில் வந்து செல்லும். வயல்வெளியை உழும்பொழுது தெறித்து விழும் புழு பூச்சிகளை உண்பதற்கு சுற்றி வரும் பறவைக் கூட்டத்தை கண்டு மெய்மறந்ததுண்டு. 
 
ஆனால் சில நாட்களாக நான் அடிக்கடி காண்கிற காட்சி  என் நெஞ்சை பிசைய வைக்கிறது. சூரியன் விழித்து  வெகுநேரம் கழித்து விழித்து அவசர அவசரமாக கடன்முடித்து, குளித்து, உடுத்தி, உண்டு மனைவி தரும் மதிய உணவை வண்டி பெட்டியில் திணித்து, அலுவலகம் நோக்கி பாயும் ஜாதியை சேர்ந்தவன் நான். 15 கி.மீ சாலையில் தினமும் சென்று வருகிறேன். ஓராண்டுக்கு முன்னர்தான் அந்த சாலையை இருவழிச் சாலையாக அகலப்படுத்தினார்கள். சாலை அகலப் படுத்தப்பட்டதிலிருந்து அடிக்கடி உயிரினங்கள் அடிபட்டு சாவது சகஜமாகிவிட்டது. பெரிய திட்டங்களை அரசு தீட்டும் பொழுது சுற்றுசூழல் அலவலர்கள் எதிர்ப்பார்கள் இவர்களுக்கு வேறு வேலையில்லை என்று இகழ்ச்சியாய் நினைத்ததுண்டு. அது எவ்வளவு உண்மை என்று நேரில் காணும்போது புரிகின்றது.

மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது அந்த காட்சியை          காண்கிறேன். குறிப்பிட்ட ஒரு பறவை அடிபட்டு கிடக்கிறது ஏன் இந்த பறவை மட்டும் அடிக்கடி அடிபட்டு சாகின்றது என்று புரியவில்லை. அதன் பெயரும் தெரியவில்லை. ஒரு நாள் ஆனந்தபுரம் தாண்டியவுடன் ஒரு நாள் தைலாபுரம் ஓடைக்கருகில் பல இடங்களில் பார்த்ததும் மனம் பதறுகிறது. சிலநேரம் இறங்கி இறந்த பறவையை சாலையோரம் போட்டுவிட்டு செல்வேன். பல நேரம் நேரமின்மையால் கடந்து சென்றுவிடுவேன். மாலை திரும்பி வரும்பொழுது இறைக்கை சிதறி மாமிச சிதறலாய் கிடக்கும். அன்று இரவு தூக்கம் வராது. ஏன் அந்த இனம் மட்டும்? இயற்கை ஆர்வலர் அந்தோணிராஜாவுக்கு போன் செய்து விசயத்தை சொன்னேன். அந்த பறவையின் அடையாளத்தை கேட்டார். பழுப்பு நிறத்தில் உள்ளது. காக்கையை விட பெரியது. வால் நீளமாயுள்ளது என்று கூறினேன்.

‘ஆங் அதன் பெயர் செம்பவம் என்று கூறுவார்கள். செங்காகம் என்பது தான் பேச்சு வழக்கில் செம்பவம் என மருவியிருக்கும் என்பது என் கருத்து’ வயல்வெளியில் வேலியோரங்கள் திரியும் கரட்டான் என்ற சிறியவகை ஓனான்தான்  இதன் முக்கிய உணவு இந்த பறவையால் உயரமாகவோ, வேகமாகவோ பறக்க முடியாது. அதனால் தான் ரோட்டை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு சாகின்றது. தகுதியுள்ளது தப்பி பிழைக்கும் என்று முடித்தார்.

மனிதனின் சுயநலத்தினாலும் அந்த வளர்ச்சியாலும் ஒரு இனம் அழியும்போது இந்த வாசகம் எப்படி பொருந்தும்?

இரண்டு வாரமாக அந்த காட்சியை காணமுடியவில்லை தெரியவில்லை. ஒருவேளை செம்பவம் வாழும் தகுதியை பெற்றுவிட்டதா அல்லது இந்த பகுதியில் அந்த இனமே அழிந்து விட்டதா இன்று காலை எங்காவது தென்படுகிறதா என்று வேலியோரங்களால் கவனித்தபடி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். ஆனந்த இசக்கியம்மன் கோவிலை தாண்டி ஒரு திருப்பத்தில் அட சட் சுதாரித்து பிரேக் போடுவதற்குள் என் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது ‘செம்பவம்’.’

Monday, March 11, 2013

பகுத்தறிவு சிறுகதை

சூடு பறந்து கொண்டிருந்தது அடுப்படியில் இல்லை. நிலா தொலைக்காட்சி நடத்தும் உனதா எனதா நிகழ்ச்சி ஒளிப்பதிவின் போது.

ஆவிகள் உண்டு என்று ஒரு அணியும், ஆவிகள் இல்லை என்று அணியும்

அவரவர் கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தனர்.

ஆவிகள் உண்டு என்ற தலைப்பில் பேசிய ஆவி மீடியம் சுந்தர்ராமன் ஆவிகள் உலகத்தை பற்றியும் ஆவிகள் செயல்படும் விதத்தை பற்றியும் விளக்கி கொண்டிருந்தனர். அவர் மூலம் தங்களது இறந்து போன முன்னோர்களின் ஆவிகளிடம் பேசி குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டவர்கள் தங்களது அனுபவங்களை கூறி ஆவிகள் உண்டு என்ற அணிக்கு வலு சேர்த்துக் கொண்டிருந்தனர்.

இவை அனைத்தையும் தனது வாதத்திறமையால் மறுத்துக் கொண்டிருந்தார் பகுத்தறிவு பகலவன் செந்தமிழ் செம்மல் என்று பல பட்டங்களை பெற்ற இளவேந்தன். தனது ஆணித்தரமான கருத்துக்களால் ஆவிகள் உண்டு என்ற அணியினரின் மூக்கை அறுத்துக் கொண்டிருந்தார். அவர் பேசும் ஒவ்வொரு தடவையும் பார்வையாளர் பகுதியில் இருந்து கைதட்டலும் கரவொலியும் எழுந்தன.

நிகழ்ச்சியின் இறுதிபகுதியில் இளவேந்தன் ‘என்னைப் பொறுத்தவரை ஆவி என்றால் உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் உண்டு. அது நீராவி மட்டும்தான். பேய் என்றால் ஒன்றே ஒன்றுதான் அது ஒவ்வொரு ஆண்களுக்கும் திருமணத்திற்குப் பின் வாழ்க்கையில் காண்பது மட்டும்.’ என்று கூறி அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்தார்.

ஒளிப்பதிவு முடிந்தது. அனைவரும் விடைபெற்றுக்கொண்டிருந்தனர். ‘பகுத்தறிவு பகலவன்’ இளவேந்தன் ஆவி மீடியம் சுந்தர்ராமனை தனியே அழைத்தார்.

தனியறையில் ‘சுந்தர்ராமன் சார். எனக்கு உங்க அப்பாயிண்ட்மெண்ட் வேணும் எப்ப கிடைக்கும்’.

‘என் அப்பாயிண்மெண்டா எதுக்கு?’ ‘இல்ல இறந்து போன எங்கப்பா ஆவியோட சொத்து விசயமா கொஞ்சம் பேசணும்.’நெஞ்சுவலி சிறுகதை

                                      
                    சங்கரலிங்கத்துக்கு குளிர்போட்டு ஆட்டியது. குளிர் என்றால் வெப்பத்துக்கு எதிர்பதமான குளிர் இல்லை. பேராசை என்னும் குளிர்.
தரகர் பொன்னம்பலம் வந்து சென்றதிலிருந்து தான் அவருக்கு இந்த நிலைமை

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.