எழுதியவர் தா. ராசாமணி
மல்லிகா சுட…சுட இருந்த பால் பாத்திரத்தை ஹால் தரை மீது வைத்தாள்.
கூந்தலில் சூடியிருந்த மல்லிகைசரம்அந்த அறையில் காதல் போதை மணத்தை தாராளமாக பரப்பிக் கொண்டிருந்தது.
கோபால் அவளைப் பார்த்தான்…! பார்வையில் ஒரு வித மயக்கம். அவளை அப்படியே அள்ளி அணைக்க தூண்டியது அவனது வாலிப வயது…!
“மல்லிகா…இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அழகாக இருக்கிறாய்….ஐந்து வருடத்திற்கு முன் நம்முடைய முதலிரவில் இப்படிதான் நீ என்னருகில் வந்தாய்….”அவன் புன்னகையோடு சொன்னான். ஆனால் அதில் சோகம்;.பளிச்சிட்டது…..”
“உங்க மனம் ஏன் இப்படி இன்று தடுமாறுகிறது..? எனக்கு புரியவில்லை. நம்முடைய இறுதி தீர்மானத்தின்படி நடப்பதுதான் வாழ்வின் கடைசி மணித்துளிகளிலிருக்கும் நமக்கு நல்லது சரி….சரி….இந்த பாட்டிலின் மூடியைத் திறக்க முடியவில்லை திறந்து தாருங்கள்…”
மல்லிகா அந்த சிறு பாட்டிலை கோபாலிடம் கொடுத்தாள்.
“விஷம்..” என்ற எழுத்துக்கள் அந்தபாட்டியிலிருந்து குழல் விளக்கு ஒளியில் நன்கு பளிச்சிட்டது.
கோபால் அந்த கடுமையான விஷம் நிறைந்த பாட்டிலின் மூடியை திறந்து மல்லிகாவிடம் கொடுத்தான்.
மல்லிகா விஷத்தை பாலில் ஊற்றினாள்.
“நம்முடைய முதலிரவில் சுவையான பால் நிறைந்த டம்பளரை என்னிடம் கொடுத்தாய்…ஆனால் இன்று…விஷம் கலந்த பாலை எனக்கு தர போகிறாய்…”
இதுவரை அடக்கி வைத்திருந்த சோகம் பீறிட்டு அவளை அழ வைத்தது.
அழகிய கண்களிடமிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
சோகத்தின் உச்சக்கட்டம்….!
வேதனையின் இறுதிக்கட்டம்….!
“அழாதே மல்லிகா….”என்ற கோபால் அவளை அணைத்துக் கொண்டான்…
“இன்று நமது வாழ்வின் இறுதிநாள்…. நமது குடும்ப வாழக்கைக்கு சமாதி கட்டும் கடைசிநாள்….!
கோபால் மெதுவாக அவள் காதருகில் மென்மையாக சொன்னான்.
அவர்களது பேச்சையோ….செயலையோ கண்டுக் கொள்ளாமல் அவர்களது மூத்த மகன் நான்கு வயது நிறம்பிய பாலகன் கணேசும்….மூன்று வயது நிரம்பிய இரண்டாவது வாரிசான
கிருத்திகாவும் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
இளம் குருத்துக்கள்….தாய் தந்தையின் மன இறுக்கத்தை புரிந்துக் கொள்ள முடியாத சிசுகள்….!
கோபால் குழந்தைகளைப் பார்த்தான்…“இந்த இளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்…. அவர்களும் நம்மோடு இறக்க வேண்டி இருக்கே…! ஆண்டவா….! இது உனக்கே அடுக்குமா…?
மல்லிகா மன இறுக்கத்தில் கோபாலை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவளது அழகிய விரல்கள் அவனது தோளை கிழித்தன…!
அந்த வலியை அவன் உணர முடியாத நிலையில் இருந்தான்.
“ஆண்டவா…! நாங்க என்ன தவறுச் செய்தோம்….ஏன் எங்களுக்கு இந்த சோதனை…” மல்லிகா கதற ஆரம்பித்தாள்.
“என் பெற்றோர் கூலிவேலைச் செய்பவர்கள். எவ்வளவோ துன்பத்தின் மத்தியில் நான் எம்.ஏ ஆங்கிலம் படித்தேன். கல்லூரி பேராசிரியராக பணியாற்ற வேண்டும் என்று எம்.பில் முடித்தேன். தேசீய அளவிலான தகுதித்தேர்விலும் தேர்ச்சிப்பெற்றேன். ஆனால் வேலை கிடைக்க வில்லை. சுயநிதிகல்லூரியில் ஆங்கில பேராசிரியர் பணி கிடைத்தது. மாத சம்பளம் ரூபாய் ஐயாயிரம். அந்த வேலையை மனப்பூர்வமாக செய்தேன். இப்பொழுது அந்த வேலையும் பறிப்போய் விட்டது….”
மல்லிகா தன் முகத்தை தூக்கி அவனைப் பார்த்தாள்.
“இன்று காலை வழக்கப்படி நான் பணிக்கு சென்றேன். கல்லூரி தாளாளர் என்னை அழைத்தார். நான் அவரை சந்தித்தேன். அவர் சொன்னார்…” கோபால் நீங்க பார்க்கிற ஆங்கில பேராசிரியர் பணி அரசு உதவிப் பெறும் பணியாக” மாறிவிட்டது. என்றார். நான் மகிழ்ச்சியோடு அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தன் முகத்தை இரும்பு போல் கடினமாக வைத்துக்கொண்டு சொன்னார்.
“கோபால் நமது நிர்வாகத்துக்கு ரூபாய் இருபத்தைந்து லட்சம் நீங்க கொடுத்தால் இந்த அரசு உதவிப்பெறும் ஆங்கில பேராசிரியர் பணியை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். அரசு ஊதியமும் உங்களுக்கு கிடைக்கும் என்றார். நான் என் ஏழ்மை நிலைமையை எடுத்துரைத்தேன்.” மல்லிகா தன் கண்களை அகலமாக்கி தன் கணவர் கோபாலை கவலையோடு பார்த்தாள்.
“இன்னும் கேளு….மல்லிகா….என் பேச்சுக்கு அவர் இடம் கொடுக்க வில்லை. சாரி…மிஸ்டர் கோபால்….ரூபாய் இருப்பதைந்து லட்சம் கொடுத்தால்ää இந்த பணியைத் தொடரலாம் இல்லை என்றால் வேலையை விட்டு போகலாம்…என்று கடினமாக உறுதியாக சொல்லிவிட்டார்.
“நீங்க வேறு ஏதாவது வேலையை கேட்க வில்லையா…? மல்லிகா கேட்டாள்…அவளது கண்கள் அவனது முகத்தையே வட்டமிட்டன.
“கேட்டேன்….மல்லிகா….இதுவரை ஆங்கில பேராசிரியராக பணிபரிந்த நீங்கள்…இனி எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு இருக்காது. எனவே நாங்கள் உங்களை டிஸ்மிஸ் செய்கிறோம்…. “குட்பை…” என்றவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். எனக்கு அவமானமும்; ஏமாற்றமும் ஏற்பட்டது. உடனே வீட்டுக்கு வந்து விட்டேன் மல்லிகா…"
“நான் எவ்வளவு ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன்…தெரியுமா…உங்களுக்கு?” மல்லிகா வெறித்த பார்வையோடு தன் கருவறையில் பிறந்த இளம் வாரிசுகளை பார்த்தவாறு கூறினாள்.
“என்னுடைய சிறுவயதில் என் அன்னையை இழந்தேன் என் அப்பா இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்;.அவர் சாதி வெறிப்பிடித்த ஒரு அரசியல் கட்சியின் உபதலைவர். என்னை ஒரு ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தார். சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்னை வந்து பார்ப்பார். செலவுக்கு அதிகமாக பணம் கொடுப்பார். அன்றைய காலகட்டத்தில் தமிழகமே தமிழுக்கு போராடிக் கொண்டிருந்ததால் நான் எம்ஏ தமிழ் முடித்தேன். எம்பில் முடித்தேன். அப்பொழுதுதான் நீங்கள் என்னை காதலித்தீர்கள்….”
“ஏன் நீ என்னை காதலிக்க வில்லையா….? கோபால் அந்த சோகமான சூழ்நிலையிலும் கொஞ்சம் கோபமாக கேட்டான்…
“பெட்ரோலையும் நெருப்பையும் அருகில் வைத்தால் இரண்டுமே சேர்ந்து தீயை வளர்க்க தானே செய்யும். நானும் காதல் வயப்பட்டேன். நம் இருவருமே வௌ;வேறு ஜாதிகளை சார்ந்தவர்கள். உங்க பெற்றோரும் என் தந்தையும் நம் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நாம் நமது சொந்த கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்து சட்டபடி திருமணம் செய்து கொண்டோம்.
கோபால் தொடர்ந்தான்….
நான் சுயநிதி கல்லூரியில் பேராசிரியராக செர்ந்தேன். உனக்கு தமிழ் போராசிரியை பணி கிடைக்காததால் ஒரு மெட்ரிக் பள்ளியில் முவாயிரம் ரூபாய்க்கு தமிழாசிரியை பணியில் சேர்ந்தாய்…வீட்டு வாடகை நான்காயிரம் போக….மீதி பணத்தை வைத்து குடும்பம் நடத்தினோம் காலத்தின் பரிசாக மகன் கணேசும்….மகள் திருத்திகாவம் கிடைத்தாள்.
மல்லிகா மகன் கணேஷ் அருகில் அமர்ந்து “அந்த விஷம் கலந்த பாலை” ஆற்றிய வாறு….தலையை கவிழ்ந்தவாறு தொடர்ந்தாள்.
“இப்பொழுது வேலை உங்களுக்கு போய்விட்;;டது. இனி உங்களுக்கோ எனக்கோ அரசு மானியம் வாங்கும் கல்லூரிகளில் பேராசிரியர் பணி கிடைக்காது. ஏனெனில் நம்மால் இருபது லட்சம் நாற்பது லட்சம் கொடுத்து வேலை வாங்க முடியாது.நம்மிடம் எந்த சேமிப்பும் இல்லை. நம் பெற்றோர் நம் உறவை துண்டித்து விட்டார்கள்…”
மல்லிகாவின் பிடியிலிருந்து விலகிய கோபால் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.
இருளின் நிழலிலே உலகம்…..!
இருண்டிருந்த உலகைப்பார்த்து கண் சிமிட்டி மௌன புன்னகையை வெளியிட்டுக் கொண்டிருந்த விண்மீன்கள்....!
தூரத்தில் எங்கோ ஊழையிட்டுக் கொண்டிருந்த தெருநாய்கள்….!
கோபால் மெல்ல தன் மனைவியைப் பார்த்து திரும்பினான்.
“நீயோ…நானோ இனி கல்லூரிகளில் பேராசிரியர் வேலை பார்க்க முடியாது. ஏனெனில் நகரத்தில் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து கல்லூரிகள்தான் இருக்கும். ஒரு சப்ஜெட்க்கு ஐந்து அல்லது 8 பேர் வேலைப்பார்ப்பார்கள். ஆனால் அந்த ஒரு சப்ஜெட்க்கு -- பாடபிரிவுக்கு குறைந்தது ஐநூறு பேராவது விண்ணப்பம் பண்ணுவார்கள். படித்த அனைவருக்கும் வேலைக்கு வாய்ப்பில்லை…இனி நாம் எந்த பயிற்சியும் படித்து மேல்நிலைப்பள்ளிக்கோää அல்லது தொடக்கப்பள்ளிக்கோ ஆசிரியராக பணிபுரிய முடியாது. எனவே தான் நாம் அனைவரும் தற்கொலை செய்துக் கொள்ள போகிறோம்….வாழமுடியாதவர்கள் வாழ தகுதியில்லாதவர்களுக்கு தற்கொலைதான் சரியான முடிவு….கோபால் பிரமை பிடித்தவன் போல் நின்றுக் கொண்டிருந்தான்….
“நாம் தற்கொலைச் செய்துக் கொண்டால் இந்த பிஞ்சு குழந்தைகள் நம் அன்பின் பரிசான இந்த குழந்தைகள்….இந்த பாழும் சமுதாயத்தில் அனாதைகளாய்….வயிற்று பசியில் பிச்சைக்காரர்களாய் வாழ்வது….என்னால்…அந்த காட்சியை கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை”
“மல்லிகா “அந்த பாலை டம்பளரில் ஊற்றிக் கொடு….நான் என்….அன்பு மகனுக்கு கொடுக்கிறேன். அதன்பின் மகள் கிருத்திகாவுக்கு கொடுக்க…” வார்த்தைகளை முடிக்க முடியாமல் கண்ணீர் மளுக நின்றான்.
மல்லிகா ஒரு டம்பளரில் அந்த பாலை ஊற்றிக் கொடுத்தாள்.
அதை வாங்கிய கோபால் தன் மகனை பார்த்த வண்ணம் அவனை நோக்கி நடந்தான்.
மகன்கணேசன் ஏதோ கனவு கண்டு மெல்ல புன்னகை செய்துக்கொண்டிருந்தான்.
“கணேசன்…..கணேசன்….”-கோபால் தன் மகனை தட்டி எழுப்பினான்.
கோபால் தன் மகனை தூக்கி தன்மடியில் வைத்து பால் டம்பளரை அவன் வாயில் திணித்….
டக் டக்..என்று கதவை தட்டும் சத்தம் கேட்டது…
“மிஸ்டர் கோபால்……மிஸ்டர் கோபால் பழக்கப்பட்டகுரல்…
“மல்லிகா….பால் நன்றாக ஆரட்டும்….நான் யார் கதவை தட்டுகிறார்கள்…. நான் பார்த்திட்டு வருகிறேன்…..”
கோபால் விஷபால் டம்பளரை தரையில் வைத்து விட்டு முன் கதவை திறந்தான்.
“கோபால்….சாரி…இந்த இரவு நேரத்தில் உங்களுக்கு தொந்தரவுக்கு கொடுக்கிறேன்”.
“என்ன விஷயம் ஆனந்த்….?”
“ஒரு முக்கியமான விஷயம்… நாளை காலை பத்து மணிக்கு நம்ம மாவட்ட கலெட்டர் நம்ம கல்லூரிக்கு வருகிறார்…அவரை வரவேற்க நம்ம என்.சி.சி. அதான் தேசிய மாணவ படைக்கான யூனிபார்மை எடுக்க இன்று மாலை பிரோவை திறந்தேன்ஆனால்;….”
என்ன ஆனந்த்…என்ன அச்சு….”
“அவ்வளவு யூனிபாமும் கீழே விழுந்து விட்டன. மேலும் அவையாவும் இஸ்திரிப் போடாமல் இருந்தன. ஆந்த யூனிபார்ம்களை மாணவர்களுக்கு கொடுக்;க முடியாது. அப்படி கொடுத்தால் பிரின்ஸ்பால் மற்றும் என்.சி.சி அலுவலர்களும் என் மீது புகார் பண்ணுவார்கள்…
“நான் அந்த யூனிபார்மை மூட்டையாக கட்டி வழக்கமா நமக்கு இஸ்த்ரிப் போடுகிற தொழிலாளியை பார்க்க ஓடினேன்….ஆனால் ஏதோ கல்யாணத்திற்காக வெளியூர்க்கு போய் விட்டான்….நான் திகைச்சிட்டேன்….ரொம்ப கவலைப் பட்டேன்…..
ஆனந்த் கல்லூரியில் விளையாட்டுத்துறை பேராசிரியர்….கோபாலிடம் அதிக மதிப்பு வைத்திருப்பவர்….
“நான் எல்லா இடத்திலும் அலைந்து அயர்ன் பண்ணும் கடைகளைத் தேடினேன். ஒரு கடையும் இல்லை….அப்பொழுதுதான் உங்க நினைவு வந்தது. ஒருமுறை நீங்கள் கால்பந்தாட்ட வீரர்களுக்கானய10னிபார்ம் எல்லாம் அயர்ன் பண்ணி கொடுத்தீர்கள்….”
“மேலே செல்லுங்க ஆனந்த்”
தயவு செய்து இந்த நாற்பது ஜதை ய10னிப்பாம் ஆடைகளை அயர்ன் பண்ணித்தாருங்கள். பிளிஸ்….நான் உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். நான் நம்ம விளையாட்டு மைதானத்தை சுத்தப்படுத்தவும் அலங்காரம் சீட் அரேச்மெண்ட எல்லாம் இருக்குது மிஸ்டர் கோபால் தயவுசெய்து இந்த உதவியை செய்யுங்கள்”
ஆனந்த் தன்பையிலிருந்து இரண்டு ஐநுறு ரூபாய் நோட்டுகளை நீட்டீயவாறு கேட்டான்.
“என்னங்க உங்க பையன் “அந்தபாலை” எல்லாம் காலால் உதைத்து கொட்டி விட்டான்….”
“மல்லிகா….கீழே சிந்திய பாலை துணிவைத்து துடைத்து எடுத்து விடு…. நீயும் குழந்தையோடு படுத்து தூங்கு…”
.”ஆனந்த் காலையில் வந்து ய10னிபார்ம் எல்லாம் எடுத்துகுங்க….”
கோபாலின் அந்த பணத்தைப் பெற்றுக் கொண்டே கூறினான்.
அடுத்த நாள் காலை ஐந்து மணி….
யூனிபார்ம் எல்லாம் அயர்ன் பண்ணின கோபால் அவற்றை அழகாக பார்சலாக கட்டி வைத்தான்.
வீட்டிலிருந்து சிவப்பு நிற சாக்பீஸை எடுத்து வந்த கோபால் வீட்டு சுவற்றில்….மிக தெளிவா…“இங்கு துணிகள் “அயர்ன்” பண்ணித்;தரப்படும்….” என எழுதினான்.
ஒரு சட்டைக்கு ரூபாய் ஐந்து என அயர்னுக்கு வாங்கலாம். ஓரு நாளைக்கு ஐம்பது சட்டைகள் அயர்ன் பண்ணினால் ரூபாய் இரநூற்றி அம்பது கிடைக்கும் ஒரு பட்டுபுடவையை போன்ற துணிக்கு ரூபாய் இருபது வாங்கலாம். யாருக்கும் அடிமையாக வேலைச் செய்யாமல்; சொந்த உழைப்பில் மாதம் ரூபாய் எட்டாயிரம் வரை சம்பாதிக்கலாம்….
முதன் முதலாக அவன் புன்னகைத்தான்…. அதே நேரத்தில் கிழக்கு வெளுத்தது….!ஒரு புதிய வாழ்வு அவனிடம் உதித்தது.