Sunday, June 30, 2013

குறுங்கவிதைகள்

*புற்றுநோய்க்கு பயந்து
 புகையை கைவிட்டது
 மின்சார ரயில்!
*துருப்பிடித்து தவமிருக்கிறது
 செல்போன் அழியட்டும் என்று
 தபால்பெட்டி!
*எப்படியும் தேடி வருவார்கள் என்று
 நம்பிக்கையோடு மூலையில்
 முடங்கிக்கிறது குடை!
*அருவி கருமையாக கொட்டுமோ
 உன் கூந்தல்?
*இலக்கியம் பேசுகின்றன உன் விழிகள்!
  இலக்கணம் மீறத்துடிக்கிறது என் மனம்!
*கடற்கரையில் காதல்
 ஒரு சுண்டல் பொட்டலம் தின்று முடிக்கும் நேரத்தில்
 கசக்கி எறியப்படுகிறது அந்த காகிதத்தைப்போல இன்று!
 ஒரு அலை வந்து திரும்பிச்செல்லும் நேரத்தில் மறைந்துவிடும் நாளை!
*பனிமூடிக்கிடக்கிறாயே என்று கொஞ்சம் விளையாடிப் பார்த்துவிட்டோம்
 உள்ளே உன் தேகம் கொதிப்பேறிக் கிடக்கிறது என்பதை அறியாமல்!
*காதோரம் வெண்மை!
 குன்றாத கற்பனை! குறையாத எழுத்துக்கள்!
 உருமாறும் பாத்திரங்கள் சமையலறையில்!
*அழகிய கணணியால் பத்து விரலும் பேனாவாய் மாறினாலும்
 ஒழுகிய பேனாவால் பத்துவிரலும் மைபூசியது மறக்குமோ?
*மிதித்தாலும் சுமக்கின்றது
  சைககிள்!
*நதியை பெண்ணென்று வைத்தது
 அதன் துகில் உரித்திடத்தானோ
 மணல்கொள்ளையர்களே?
*அன்பே நம் காதலில் எதிரிகள் யாருமில்லை
 என்றிருந்தேன் நீயே எதிரியாவாய் என்றறியாமல்!
*வெள்ளை எறும்புகள்
 ஒன்றன் பின் ஒன்றாக
 சாலையின் நடுவே கோடுகள்!
*கண்ணீரை சிந்தியபடி செல்கின்றன
 தாயை பிரிந்த சோகத்தில்
 ஆற்றின் குழந்தைகள் மணல் லாரிகளில்!

9 comments:

  1. உருமாறும் பாத்திரங்கள், சைககிள், சாலையின் நடுவே கோடுகள் அனைத்தும் ரசிக்கத் தக்கவை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே..!

      Delete
  2. ஆழமான சிந்தனையில் பிறந்த
    கவிதைகள் அனைத்தும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி RAMANI S திண்டுக்கல் தனபாலன் அவர்களே.....

    ReplyDelete
  4. Short & sharp...

    @ Karupu aruvi - Alahiyal

    @ vellai yerumpu,.
    post box..
    cycle..
    computer- Yethartham...

    @ Manal kollai- samuha kopam..

    Vovontum oru vitham..

    Anaithu'kum perumitham...

    Valthuhal.. Mr. Sornamithran...best wishes..plz conti...nanti.

    ReplyDelete
  5. வணக்கம்
    இன்று வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனது வாழ்த்துக்கள் பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/08/2_27.html?showComment=1377604924193#c5062570946786100466
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. நேர்ல பாத்து , கட்டியணைச்சு கரங்களுக்கு முத்தம் கொடுக்கத் தோன்றுகின்றது , கவிதையைப் படித்த பின் .

    ரெம்ப ரெம்ப ரெம்ப ..........................பிரமாதமான வரிகள் பாஸ் ...! சான்சே இல்ல .... அழகு அழகு அழகு ....!

    ReplyDelete
  7. மிக்க நன்றி.ரூபன்,ஜீவன்சுப்பு.

    ReplyDelete

தட்டிக்கொடுத்தாலும் திட்டிவிட்டு போனாலும் சந்தோசமே,,,,,

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.