கி.பி.2100
அந்த நவீன விண்வெளி ஓடம் ஒரு புதிய உடுமண்டலத்தில்
ஊடாக பயணித்துக்கொண்டிருந்த்து. அது ஒளியின் வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது.
அந்த விண்வெளி ஓடத்தை இருவர் செலுத்திக் கொண்டிருந்தனர்.
‘’நண்பா நமது
பயணம் எப்போது முடியும்?
‘’இன்னும் நான்கு
புதிய கிரகங்களில் இறங்கி ஆய்வுசெய்து நமது ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டுமல்லவா?’’
‘’அப்படியானால்
இன்னும் நான்கு மாதங்கள் ஆகிவிடும்’’
‘’அதோ ஒரு
புதிய கிரகம் தெரிகிறது. அருகில் சென்று பார்ப்போம்’’
விண்வெளி ஓடம்
மெதுவாக அந்த புதிய கிரகத்தை நெருங்கியது.பெரும்பகுதி நீரால்
சூழப்பட்டிருந்த அந்த கிரகத்தை சுற்றி வந்தது.
‘’தண்ணீர் இருப்பதால்
உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறு உள்ளது. இன்னும் தாழ்வாக பறந்து
பார்க்கலாம்’’
‘’அதற்கு முன்
தற்காப்புகான ஆயுதங்களை அலெர்ட் செய்துகொள்வோம். எப்படிப்பட்ட
உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தெரியாதல்லவா?’’
‘’சரியாகச்
சொன்னாய்’’
அனைத்தையும் ஆயத்தம்
செய்துவிட்டு கிரகத்தின் நிலப்பகுதியில் தாழ்வாகப் பறக்கத் தொடங்கினார்கள்.
நிலப்பகுதி முழுவதும்
மிகப்பெரிய கட்டிடங்கள்,உயர்ந்த கோபுரங்கள் நிறைந்திருந்தன. ஆனால் அவை அனைத்தும் சிதிலமடைந்துபோய் கிடந்தன. உயிரினங்கள் ஒன்றையும் காணோம். ஆச்சிரியப்பட்டுப் போனார்கள்.
‘’சமீப காலத்தில்தான் அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கின்றன போலும்’’
‘’’ஆம் அப்படித்தான் தெரிகிறது. தரையிறங்கி பார்ப்போமா?
திடீரென்று விண்வெளி ஓடத்தில் அபாய விளக்கு சிகப்பு நிறத்தில் எரிந்தது. அபாய ஒலியும் ஒலித்தது
கட்டுப்பாட்டு அறையிலிருந்து குரல் ஒலித்தது.
‘’கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேசுகிறேன் நீங்கள் மிகவும் ஆபத்தான கிரகத்துக்குள் நுழைந்திருக்கிறீர்கள். உடனே வெளியெறவும்’’
.’’ஏன் என்ன விசயம்’’
‘’’ அதீத விஞ்ஞான வளர்ச்சியால்
சுற்றுச்சூழல்
மாசுப்பட்டு அங்கே வாழ்ந்த உயரினங்களெல்லாம் அழிந்து விட்டன. உயிருக்கு ஆபத்தான ரசாயன வாயுக்களும்,கதிரியியக்கமும் கிரகம் முழுவதும் சூழ்ந்திருக்கின்றன.உடனே வெளியேறவும்.’’
‘’அப்படியா இந்தக் கிரகத்தின் பெயர் என்ன?’’
‘’ பூமி.
Tweet | |||||
நடக்கும்... நடந்தாலும் நடக்கும்...
ReplyDeleteநடக்கும்... நடந்தாலும் நடக்கும்...
ReplyDeleteஅருமையான அறிவியல் பதிவு..
ReplyDeleteஎதிர்காலம் நிச்சயம் இப்படித்தான் இருக்கும்..நன்றி.
வருக தோழரே...
ReplyDelete