கால மாற்றத்தால் நடைமுறை பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் தொழில் நுப்பங்கள் எப்படி முரணாகிப் போகின்றன என்பதே அந்த கட்டுரைகளின் கரு.
அதே பாணியில் நான் தொடர்ந்து எழுதாலாம் என்று எண்ணி இந்த பகுதியை ஆரம்பிக்கிறேன்.
முதலில் தங்க நகை உற்பத்தியில் ஏற்பட்ட ஒரு முரண்.
முன்பெல்லாம் தங்க நகைப்பட்டறைகளில் மற்ற உலோகங்களை மிகவும் கவனமாக கையாள்வாhக்ள். ஏனெற்றால் தப்பித்தவறி தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்து விட்டால் அதன் தரம் குறைந்து விடும் வாய்ப்பு உண்டு. மற்றொரு விசயம் மற்ற உலோகங்கள் கலந்து விடும்போது அதன் உருகும் வெப்பநிலை குறைந்து விடும். குறி;ப்பிட்ட வடிவம் உருவான பின்பு காய வைக்கும் போது உருகிவிட வாய்ப்பு உண்டு.
வேலை கற்றுக் கொள்ளும் இளைஞர்கள் செம்பு அல்லது வெள்ளியிலோ தான் செய்து பார்த்து பழக வேண்டும். எனவே அவர்கள் வேலை குறைவான நேரம் முதலாளி ஊரில் இல்லாத சமயம் பார்த்து பழகுவார்கள்.
இருந்தாலும் செம்பு வெள்ளி ஆகிய உலோகங்கள் இல்லாமல் நகை செய்ய முடியாது. ஆனால் அதை தேவைப்படும் நேரத்தில் எடுத்து பயன்படுத்திவிட்டு பத்திரப்படுத்து விடுவார்கள்.
தேவைப்படும் உலோகங்களே இப்படி என்றால் ஈயம் போன்ற உலோகங்கள் (அலுமினியம்ää வெள்ளியம் காரியம்ää பித்தளை) அண்டவே விடுவதில்லை. தங்கத்தோடு அவை பட நேர்ந்தால் நீர்த்தப்பட்ட கந்தக அமிலம் (சல்ப்பூரிக் ஆசிட்) புளிகரைசல் ஆகிய வற்றில் நன்கு கழுவி விடுவது வழக்கம்.
இதை அறிந்து கொள்ள தங்க நகைகளை பற்ற வைக்கும் நுட்பம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
கலப்பு உலோகங்கள் தனித்த உலேகத்தை விட உருகுநிலை குறைவு என்று பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம். தங்க நகைகள் பற்ற வைக்க தங்கத்தை விட உருகுநிலை குறைந்த கலப்பு உலோகம் தேவை அதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டது தங்கம் செம்பு வெள்ளி கலவை ஆகும். இந்த கலவையில் 20% முதல் 30%வரை செம்பு வெள்ளி சேர்த்தால் தான் உருகி வேலை செய்வதற்கு எளிதாக இருக்கும். சமீப காலம் வரை இந்த முறையே பயன்படுத்தப்பட்டது. எனவே இந்த முறையால் செய்த நகைகளை பழசாகின பின் உருக்கும் போது அதில் பற்ற வைக்க பயன்பட்ட கலப்பு உலோகத்தில் உள்ள செம்புää வெள்ளி ஆகியவை சேர்ந்து உருகி அதனுடைய தரத்தில் 1%முதல் 10% வரை குறைவு ஏற்படும்.எனவே தான் பழைய தங்க நகைகள் உருக்கி நகைகள் செய்தால் மச்சம் குறைந்து விடும் என்று சொல்வார்கள்.
நவீன முறையில் பற்ற வைக்க பயன்படுத்தும் கலப்பு உலேகத்தில் செம்பு வெள்ளிக்கு பதிலாக கேடியம்,சிங் போன்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றது. இந்த முறையால் தங்கத்தோடு மேற்கண்ட உலோகங்கள் 9மூ முதல் 10மூ வரை மட்டும் சேர்க்கப்படுகின்றன. அதிலும் கேடியம் பற்ற வைக்கும் நேரத்தியே பாதியளவு ஆவியாகி விடும். எனவே இந்த முறையில் செய்யப்படும் நகைகள் உருக்கப்படும் படும் போது தரம் (மச்சம்) குறைவதில்லை 916 hallmark நகைகள் இவ்விதம் செய்யப்படுகின்றன.
இப்படி எது தரத்தை குறைத்துவிடும் என்று ஒதுக்கி வைத்தார்களே அதுவே தரத்தை உயர்த்துவதினாலும் தரத்தை நிர்ணயிப்பதினால் பங்காற்றுகின்றன என்பது முரணான சுவையான நிகழ்வல்லவா?
Tweet | |||||
இந்த அளவிற்கு விளக்கமாக உங்களின் பகிர்வு மூலம் தான் தெரியும்... இன்னும் இது போல் தொடருங்கள்... அறிந்து கொள்கிறோம்... நன்றி...
ReplyDeleteஉங்கள் நல்லாதரவுடன் தொடர்கிறேன் ஐயா!
ReplyDeleteவியக்கவைக்கும் தகவல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
ReplyDeleteவருக... வருக...மிகவும் நன்றி அம்மா...
ReplyDeleteArumaiyana thahaval..nanti.
ReplyDeleteThahaval arumai..yellorum therinthu kolla vendia thahaval..nanti
ReplyDeleteநன்றி பொன்ராஜ் கோல்ட் அவர்களே.... அடிக்கடி வாங்க... உங்க முகநூலில் பகிருங்கள்.
ReplyDeleteபுதியக தகவல் தொடரட்டும் பணி!
ReplyDelete